சர்ச்சைக்குரிய புகார் கூறிய பாகிஸ்தான் தூதர் இந்தியா திரும்புகிறார்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகம் புதுடெல்லியில் உள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் உளவியல் ரீதியிலான நெருக்கடியை சந்திப்பதாக மத்திய அரசு மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இதேபோல, இஸ்லாமாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் பாகிஸ்தான் அரசு தங்களை உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டினர். இதனை அடுத்து, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகம்மது திடீரென இஸ்லாமாத் சென்றார். இதனால், அவரை பாகிஸ்தான் அரசு திரும்ப பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.
அந்த செய்தியை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்தது. “வழக்கமாக இது போல தூதர்களை அந்தந்த நாட்டு அரசு அவ்வப்போது அழைத்து ஆலோசணை நடத்தும், இது வழக்கமான ஒன்றுதான். திரும்ப அழைக்கும் நடைமுறையெல்லாம் இல்லை” என விளக்கமளிக்கப்பட்டது.
ஆனாலும், சோஹைல் முகம்மதுவை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்க பாகிஸ்தான் அரசு தயாராக இல்லை என்றே கூறப்பட்டது. மேலும், உலக வர்த்தக அமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அந்நாடு அதில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், நாளை பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுவதால் டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திலும் விழா நடைபெறும். இவ்விழாவில் சோஹைல் முகம்மது கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #TamilNews

