பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - காயமடைந்த இந்திய வீரர் உயிரிழப்பு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் சரண்ஜீத் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாகிஸ்தான்  ராணுவம் அத்துமீறல் - காயமடைந்த இந்திய வீரர் உயிரிழப்பு
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அவ்வப்போது அத்துமீறி இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த 17-ம் தேதி ரஜோரி மாவட்டம் சுந்தர்பானி செக்டாரில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர்  சரண்ஜீத் சிங் (42) பலத்த காயமடைந்தார்.

சரண்ஜீத் சிங் உடனடியாக ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படையினர் 650 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 16 வீரர்கள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com