காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தக்க பதிலடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தக்க பதிலடி
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பிம்பெர் காலி செக்டார் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறி வைத்து துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய படைகள் தக்க பதிலடி கொடுத்தனர். கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்து விட்டது. நேற்று முந்தினம் 6 பொதுமக்கள் பாகிஸ்தான் படைகளின் மோட்டார் குண்டு தாக்குதலில் காயமடைந்தனர்.

இதற்கிடையே இந்தியா அத்துமீறி தாக்குவதாக கூறி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதருக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com