

ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவத்திவர் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சம்பா மாவட்டத்தில் இன்று மாலை 4. 30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஆர்.பி. ஹஸ்ரா என்பவர் வீர மரணம் அடைந்தார். மரணமடைந்த அந்த வீரருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews #PakistanArmy