பாகிஸ்தானை யாரும் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது - ராணுவ தளபதி சொல்கிறார்

படைகளை பயன்படுத்தியோ அல்லது படைகளை பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது என பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தெரிவித்துள்ளார். #Pakistan #ArmyChief #QamarJavedBajwa
பாகிஸ்தானை யாரும் அச்சுறுத்தி பணிய வைக்க முடியாது - ராணுவ தளபதி சொல்கிறார்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது-

அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் என்ற பாதையில் பாகிஸ்தான் சென்று கொண்டிருக்கிறது. படைகளை பயன்படுத்தியோ அல்லது படைகளை பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ நம்மை யாரும் பணிய வைக்க முடியாது. எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தரும்வகையில், நமது படைகள் எப்போதும் உஷாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com