ஷாங்காய் மாநாட்டு பயணம்- மோடி விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள ஷாங்காய் மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஷாங்காய் மாநாட்டு பயணம்- மோடி விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி
Published on

காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து பலாகோட் முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், தனது வான்வழிப் பாதையை மூடுவதாக அறிவித்தது. இதனால் ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களின் சர்வதேச விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை தவிர்த்து, சுற்றி போக வேண்டிய நிலை ஏற்பட்டது. இது இந்திய விமான சேவைகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுத்துவதாக அமைந்தது.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி நிலவுகிறது. இந்த நிலையில் ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க செல்ல இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு இந்தியா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வரும் 13 மற்றும் 14-ந்தேதிகளில் 2 நாட்கள் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com