டோனி அல்லது கோலியை சேர்த்திருக்கலாம்: பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி

உலக லெவன் அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த வீரர்கள் இல்லை. டோனி அல்லது கோலியை சேர்த்திருக்கலாம் என பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
டோனி அல்லது கோலியை சேர்த்திருக்கலாம்: பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி
Published on

பாதுகாப்பு அச்சம் காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை கொண்டு வரும் நோக்குடன் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான 7 நாட்டு வீரர்களை உள்ளடக்கிய உலக லெவன் அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்த போட்டிக்கு ஐ.சி.சி. சர்வதேச அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் உலக லெவன் அணியை வீழ்த்தியது. உண்மையை கூற வேண்டுமென்றால் உலக லெவன் அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த வீரர்கள் இல்லை.

குறிப்பாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கோலி, டோனி இல்லாதது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

அதில், அவர்கள் இந்திய அணி வீர்ர்களான கோலி அல்லது டோனியையாவது உலக லெவன் அணியில் சேர்த்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com