பச்சமலையில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது

பச்சமலையில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

துறையூர்:

துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் டாப்செங்காட்டுப் பட்டியில் சட்ட விரோதமாக அரசு மதுபானமும், கள்ளச்சாராயமும் விற்கப்படுவதால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டாப்செங்காட்டுப்பட்டியில் பழங்குடியின பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

இதையடுத்து உப்பிலியபுரம் போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டாப்செங்காட்டுப்பட்டியை சேர்ந்த தமிழரசன்(வயது39) , சேலம் மாவட்டம் பச்சமலை வெங்கமுடியைச்சேர்ந்த செல்லதுரை(33) ஆகியோர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதேப்போல் டாப்செங்காட்டுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம்(45) என்பவர் அவரது கடையில் விற்பனைக்காக கள்ளச்சாராயம் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com