சென்னை அருகே ரசாயன பொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து - உரிமையாளர் உயிரிழப்பு

சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன பொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி அதன் உரிமையாளர் விஜயகுமார் உயிரிழந்தார்.
சென்னை அருகே ரசாயன பொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து - உரிமையாளர் உயிரிழப்பு
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஊரப்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன பொருள் சேமிப்பு கிடங்கில் இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயன பொருள் கிடங்கு என்பதால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர்.

இந்த தீவிபத்தில் சிக்கி அந்த சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் விஜயகுமார் என்பவர் உடல் கருகி பலியானார். அப்பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்ததனால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com