

கிங்ஸ்டன் :
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
வெற்றி குறித்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணி வீரர்கள் களத்தில் செயல்பட்ட விதம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது ரசிகர்களின் முகத்தில் புன்னகையை பார்க்க வேண்டும் என்று விரும்பி செயல்பட்டு வெற்றி கண்டோம்.
எவின் லீவிஸ் அருமையாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்தார். அதேபோல் கேஸ்ரிக் வில்லியம்சும் அபாரமாக செயல்பட்டார். அவர் 6-வது ஓவரில் விராட்கோலி விக்கெட்டை வீழ்த்தியதுடன், அதே ஓவரில் ஷிகர் தவானை ரன்-அவுட் செய்தது திருப்புமுனையாக அமைந்தது. இந்திய அணி 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன்’ என்றார்.