ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் மலர்தூவி மரியாதை

முன்னாள் முதல் மந்திரி ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் மலர்தூவி மரியாதை
Published on

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 23-ம் தேதி நடந்தது. இதில் தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.  

இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் இன்று மரியாதை செலுத்தினர்.

அவர்கள் உடன் அமைச்சர் உதயகுமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com