வெங்காய விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

வெங்காய விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராஜா தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி
Published on

புதுச்சேரி:

புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெங்காய விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து ராஜா தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை வகித்தார். அமுதவன், தமிழ்மாறன், செல்வநந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதினிவளவன், முன்னவன், ஆதவன், எழில் மாறன், சுடர்வாணன், கார் முகில், லட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வரலாறு காணாத வெங்காய விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். வெங்காயத்தை பதுக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காய்கறிகளை வியாபாரிகள் அரசே நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ் வண்ணன், தமிழ்வளவன், அகன், திருக்குமரன், சிவந்தவன், புதியவன், கோவிந்தராஜ், அலெக்சாண்டர், இளஞ்சேகரன், சச்சிதானந்தம், முரளீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் செழியன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com