ஒருதலை காதல் விவகாரம்- மாணவியை காரில் கடத்த முயன்ற வாலிபர் நண்பருடன் கைது

கோவையில் ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவியை காரில் கடத்த முயன்ற வாலிபர் மற்றும் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை கனியூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த ஒரு மாணவி 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரை திருப்பூர் ஓடக்காடு முத்துசாமி வீதியை சேர்ந்த ரஞ்சித் என்கிற ரஞ்சித்குமார் (25) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். ரஞ்சித்குமார் அடிக்கடி மாணவியை சந்தித்து தன்னை காதலிக்குமாறு கூறி வந்தார். ஆனால் மாணவி தொடர்ந்து மறுத்து வந்தார். காதலிக்க மறுத்ததால் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ய ரஞ்சித்குமார் முடிவு செய்தார்.

அதன்படி நேற்று ரஞ்சித்குமார் ஒரு காரில் தனது நண்பரான சக்திபாஷா நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவருடன் மாணவி படிக்கும் கல்லூரி வளாகத்தில் அவருக்காக காரில் காத்து இருந்தார்.

மாணவி வந்ததும் அவரை சந்தித்த ரஞ்சித்குமார் தன்னுடன் வருமாறும், திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினார்.

ஆனால் மாணவி வர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் மாணவியை தனது காரில் கட்டாயப்படுத்தி ஏற்றி கடத்தி செல்ல முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனடியாக ரஞ்சித்குமார் மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் இது குறித்து மாணவி கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை கடத்தி செல்ல முயன்ற ரஞ்சித்குமார், அவரது நண்பர் அப்துல் ரகுமான் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com