10 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - அமெரிக்க அரசு தகவல்

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி டிசம்பர் 14-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
தடுப்பூசி செலுத்தப்படுதல்
தடுப்பூசி செலுத்தப்படுதல்
Published on

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது.

இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் உறுவாக்கிய தடுப்பூசியும் 90 சதவிகிதத்திற்கு மேல் செயல் திறன் கொண்டது என தெரியவதது.

இதையடுத்து, அமெரிக்கா முழுவதும் டிசம்பர் 14-ம் தேதி முதல் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி  மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு, வயதானோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 14-ம் தேதி தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்ட நிலையில் 10 எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனர் ராபர்ட் ரெட்ஃப்ல்ட் நேற்று வெளியிட்டார்.

அந்த தகவலின்படி இங்கிலாந்தில் டிசம்பர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 23 வரை 10 நாட்களில் 10 லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டின் மார்ச் மாத இறுதிக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com