மதுரை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாத்தா கைது

மதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாத்தா கைது
Published on

மதுரை:

மதுரை மாவட்டம், சிறுவாலையை அடுத்துள்ளது செல்லகவுண்டன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன். இவரது மனைவி முத்து காமாட்சி (வயது 27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று அந்த சிறுமியின் தாத்தா முருகேசன் (50) அங்கு வந்து சிறுமியிடம் பிஸ்கட் வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார். அந்த சிறுமியும் அருகே உள்ள கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி வந்துள்ளது.

முருகேசன் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

இதனால் முத்துகாமாட்சி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது சிறுமியை, முருகேசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தாயார் முத்துகாமாட்சி சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முருகேசன் மீது (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com