

சத்திரப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோவில் அருகே வசித்து வருபவர் நாட்ராயன் (வயது53). விவசாயி. இவரது தம்பி அழகர்சாமி (50). இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றும் இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அழகர்சாமி, தனது அண்ணன் நாட்ராயனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
படுகாயம் அடைந்த நாட்ராயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்தனர்.