கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை

கோவையில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம்
Published on

கோவை:

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சாவூரில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வந்தார். பின்னர் அவர் கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்று இரவில் தங்கினார்.

அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், நீராவி மற்றும் எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு 3 முறை வந்துள்ளார். தற்போது 4-வது முறையாக கோவைக்கு வந்து புத்துணர்வு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து இன்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உடல் புத்துணர்வு பெறுவதற்காக அவர் மேலும் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற இருப்பதாக கூறப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவமனையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை பெறுவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com