சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலி

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த வட மாநில தொழிலாளி பலியானார்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலி
Published on

சேலம்:

சண்டிகார் மாநிலம் ஜோஸ்பூர் சாகட்டபுரி பகுதியை சேர்ந்தவர் சானோஷ்கான். இவரது மகன் சுதேஷ் (வயது 23).

இவர் சேலம் உடையாப்பட்டியில் உள்ள ரிக் வண்டி அலுவலகத்தின் கீழ் இயங்கும் ரிக் வண்டியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சண்டிகாரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சேலத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் வந்ததும் சுதேசின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com