பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை மீட்போம்: அமித் ஷா

பிரிவினைவாத தலைவர்களுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை மீட்போம் என மக்களவையில் அமித் ஷா தெரிவித்தார்.
உள்துறை மந்திரி அமித் ஷா
உள்துறை மந்திரி அமித் ஷா
Published on

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது மசோதாவை தாக்கல் செய்த உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்பட்டு, லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது. ஆனால், காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலை திரும்பிய பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசுக்கு எந்த வித தயக்கமும் இல்லை.

மேலும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரின் மீதமுள்ள பகுதிகளை மீட்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com