ரம்ஜான், வெப்பம் ஆகிய காரணங்களால் வாக்குப்பதிவு நேரம் மாற்றம் செய்யப்படாது - தேர்தல் ஆணையம்

ரம்ஜான் மற்றும் வெப்பத்தின் தாக்கம் ஆகிய காரணங்களால் வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. #ECCancelledPlea
ரம்ஜான், வெப்பம் ஆகிய காரணங்களால் வாக்குப்பதிவு நேரம்  மாற்றம் செய்யப்படாது - தேர்தல் ஆணையம்
Published on

டெல்லியில் வழக்கறிஞர்கள் முகமது நிஜாமுதீன் பாட்ஷா மற்றும் அசாத் ஹயாட் ஆகியோர் வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டி  சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், ‘ ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு தொடங்க இருப்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் முஸ்லிம் மக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க இயலாது.

எனவே வரவிருக்கும் ஆறாம், ஏழாம் கட்ட தேர்தல்களின் வாக்குப்பதிவு நேரத்தை காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு அவரச வழக்காக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மே 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com