

பாட்னா:
உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்மனோகர் லோகியா. சமூக சீர்திருத்தவாதியும், சுதந்திர போராட்ட வீரர். இவரது நினைவு தினம் அக்டோபர் 12-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரரான ராம்மனோகர் லோகியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், சுதந்திர காலத்தில் இந்தியாவில் பிரிந்திருந்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர். சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமின்றி இவர் சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்படுகிறார்.
இவரை கவுரவிக்கும் விதமாக, சுதந்திரப் போராட்ட வீரர் ராம்மனோகர் லோகியாவுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்.
மேலும், கோவா விமான நிலையத்துக்கும் ராம்மனோகர் லோகியா பெயரை சூட்ட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். #Tamilnews