

புதுடெல்லி:
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிதிஷ்குமார், இந்து, இஸ்லாம், புத்தம், ஜைனம் மற்றும் சீக்கிய மதங்கள் உள்ளிட்ட அனைத்து மதங்களும் மது பயன்பாட்டுக்கு எதிராக உள்ளன.
எனவே, நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துவது சமூக ஒருமைப்பாட்டை உணர்த்தும், அனைத்து மதங்களையும் மதிக்கும் அடையாளமாக பார்க்கப்படும் என வலியுறுத்தினார்.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் சாலை விபத்துகள், பல்வேறு நோய்கள் மற்றும் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், பீகார், குஜராத்தில் உள்ளதுபோல் நாடு தழுவிய அளவிலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
இதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒத்துழைக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.