நிர்பயா வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் குற்றவாளி பவன் குப்தா மறு சீராய்வு மனுதாக்கல்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார், மறு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து நிராகரித்தது.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமார் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com