பாகிஸ்தானில் ஜீப் விபத்தில் 9 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் ஜீலம் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் இன்று பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் ஜீப் விபத்தில் 9 பேர் பலி
Published on

இஸ்லாமாபாத்:

ஜீலம் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள கிலானா பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சக்கோதி பகுதியை நோக்கி சுமார் 15 பயணிகளுடன் ஒரு ஜீப் இன்று சென்று கொண்டிருந்தது.

முசாபராபாத் பகுதியை நெருங்கியபோது ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரத்தில் உள்ள கரடுமுரடான பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த 6 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஓரிருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com