

ஊட்டி:
பொங்கல் பண்டிகை நாளை (14-ந்தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் விழா களை கட்டியுள்ளது. போகி பண்டிகையான இன்று அதிகாலையிலேயே பழைய தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் எரித்தனர்.
பொங்கலையொட்டி ஊட்டி மார்க்கெட்டில் கரும்பு, மண்பானை, வெல்லம், பூக்கள், கோலப் பொடிகள் குவிந்துள்ளன. கரும்பு, மஞ்சள், பூக்கள் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.
ஒரு ஜோடி கரும்பு ரூ.160-க்கும், மஞ்சள் குலை ரூ.30-க்கும், மஞ்சள் சாமந்தி ஒரு முழம் ரூ.50-க்கும் விற்பனையானது. 15-ந்தேதி மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காக கறுப்பு கயிறு, சலங்கை, வர்ணம் மற்றும் உடலில் பூசப்படும் வண்ணப் பொடிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இருந்தாலும் தமிழர் திருநாளை குடும்பத்துடன் கொண்டாடுவதால் விலையை பொருட்படுத்தாமல் பொங்கல் பொருட்கள் வாங்கி மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாட உள்ளோம் என்று கூறினர். #TamilNews