

இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
வங்காள தேசம் நிர்ணயித்த 140 ரன்-இலங்கை 18.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து எடுத்தது. ஆட்ட நாயகன் விருதை தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் பெற்றார். அவர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா பெற்ற முதல் வெற்றியாலும் தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்று இருந்தது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
இது சிறப்பான செயல்பாடு ஆகும். இதைதான் வீரர்களிடம் இருந்து எதிர் பார்த்தோம். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்தி கொண்டு விளையாடினோம். பந்து வீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினார்கள். கேட்ச் பிடிப்பதில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு ஆட்டத்திலும், பீல்டிங்கில் முன்னேற்றம் அடைய விரும்புகிறோம். மீண்டும் பீல்டிங்கில் தவறுகளை செய்ய மாட்டோம் என நம்புகிறேன் என்றார். ஆட்டநாயகன் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் கூறியதாவது:-
இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது செயல்பாட்டை முன் நோக்கி எடுத்து செல்வேன். கடந்த சில ஆண்டுகளாக பந்துவீச்சில் கடுமையாக உழைத்து வருகிறேன். இந்திய அணியில் விளையாடுவது எனது கனவாகும். ஓய்வரையில் ஒவ்வொருவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.