கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் தொடர்பாக உ.பி.அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

முதல் மந்திரி வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி.அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் தொடர்பாக உ.பி.அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகாரளித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஒரு பழைய வழக்கு தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை பப்பு என்னும் சுரேந்திரா சிங்கை கடந்த 5-ம் தேதி கைது செய்த போலீசார் உன்னாவ் மாவட்ட சிறையில் அடைத்தனர். ஆனால், கற்பழிப்பு புகாரின்மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது குடும்பத்தாருடன் லக்னோ நகருக்கு வந்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேந்திரா சிங்குக்கு உரிய சிகிச்சை அளிக்க அனுமதிக்காமல் எம்.எல்.ஏ. தடுத்து வருவதாக நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்-தை சந்தித்து தனக்கு ஏற்பட்ட கொடுமையை கூற பாதுகாவலர்கள் அனுமதிக்காததால் முதல்வர் வீட்டின் அருகே அவர் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.


இதற்கிடையில், உன்னாவ் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேந்திரா சிங்கின் உடல்நிலை கடந்த 10-ம் தேதி இரவு திடீரென்று மோசம் அடைந்ததால் உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 11-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சுரேந்திரா சிங் உயிரிழந்ததாக தெரியவந்துள்ள நிலையில், அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்துள்ள உன்னாவ் மாவட்ட மாஜிஸ்திரேட் ரவிக்குமார், இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது. இந்நிலையில், எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், இவ்வழக்கில் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதை வைத்து தேசிய மனித உரிமை கமிஷன் இவ்விவகாரத்தில் தாமாகவே முன்வந்து (சுவோ மோட்டோ) இன்று விசாரிக்க தொடங்கியுள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது மிக மோசமான மனித உரிமை மீறலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் விசாரணை காவலில் அடைக்கப்பட்டிருந்த சுரேந்திரா சிங் மரணம் அடைந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு 24 மணிநேரத்துக்குள் ஏன் தெரியப்படுத்தவில்லை?, கற்பழிப்பு மற்றும் கொலைவெறி தாக்குதல் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டும், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத போலீசார்மீது
காவல்துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com