உலகக்கோப்பை கிரிக்கெட்- நியூசிலாந்து அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்து அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட்- நியூசிலாந்து அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
Published on

டான்டன்:

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று டான்டனில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ரன்களுக்கும், நூர் அலி ஸத்ரான் 31 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் மறு முனையில் சிறப்பாக ஆடிய நூர் அலி ஸத்ரான் அரை சதம் அடித்தார். 

41.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் சேர்த்தது. அதிக பட்சமாக நூர் அலி ஸத்ரான் 59 ரன்கள் குவித்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டும், பெர்குசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com