நேபாளத்தில் தொடர்மழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

நேபாளத்தில் பெய்து வரும் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தை கடந்து செல்லும் நபர்
வெள்ளத்தை கடந்து செல்லும் நபர்
Published on

காத்மாண்டு:

நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின்  பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 

தாழ்வான பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது. மழையால் நாட்டின் பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கனமழை காரணமாக நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி மேலும் 12 உயிரிழந்துள்ளனர். இதுவரை 16 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, நேபாளத்தில் கனமழை காரணமாக எற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. 

மழை தொடர்பான விபத்துகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com