நீட் விவகாரம்: எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு திவாகரன் ஆதரவு

நீட் விவகாரம் தொடர்பாக சென்னையில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரம்: எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
Published on

சென்னை:

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாளை அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆதரவு தெரிவித்துள்ளார். தங்கள் ஆதரவாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

‘பதவிக்கும் பணத்திற்கும்தான் அணிகள் இணைந்துள்ளன. தொண்டர்கள் கையில் கட்சி உள்ளது, கட்சியின் அஸ்திவாரம் எங்கள் கைகளில் உள்ளது’ என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com