மருத்துவ மாணவர் சேர்க்கை - நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க இன்று (9-ந்தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்து. இது 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை - நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
Published on

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடக்கிறது. இந்த தேர்வை வருகிற மே மாதம் 6-ந்தேதி மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கிற மாணவ, மாணவிகள் ஆதார் எண் அல்லது ஆதார் பெறுவதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி சி.பி.எஸ்.இ., அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் இதற்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, “நீட் தேர்வு உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் அல்ல” என உத்தரவிட்டது.

‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க இன்று (9-ந்தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்து. இது நீட்டிக்கப்பட்டு உள்ளது. 12-ந்தேதி வரை மாலை 5.30 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கு 13-ந்தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

ஆதாருக்கு மாற்றாக ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். இதில் எதை விண்ணப்பிக்கிறபோது பயன்படுத்துகிறார்களோ, அந்த அடையாள ஆவணத்தை தேர்வின்போது மாணவ, மாணவிகள் காட்ட வேண்டும். ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஒரு முறை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதை 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மேற்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com