பாராளுமன்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மார்ச் 11-ம் தேதி நடைபெறும் இரு தொகுதிகளுக்காக பாராளுமன்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு வரும் மார்ச் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க, சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக வேட்பாளரை நிறுத்தாது என சமாஜ்வாதி கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்திருந்தார்.

அதன்படி, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என அம்மாநில தலைவர் ரமேஷ் தீக்‌ஷித் இன்று கூறினார். மேலும் வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தனது வேட்பாளர்களை வாபஸ் பெற்று, சமாஜ்வாதிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com