மகாராஷ்டிரா - தேசியவாத காங்கிரசின் திலிப் வல்சே பாட்டீல் இடைக்கால சபாநாயகராக நியமனம்

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. திலிப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
திலிப் வல்சே பாட்டீல்
திலிப் வல்சே பாட்டீல்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியுடன் ஆட்சி அமைத்துள்ளது.

சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் பதவி ஏற்பு விழா நேற்று மாலை சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் சமாதி இருக்கும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் உத்தவ் தாக்கரேவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. திலிப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com