போலீசுக்கு உளவு சொன்ன 2 வாலிபர்கள் சுட்டுக்கொலை: நக்சலைட்டுகள் அட்டூழியம்

விசாகப்பட்டினத்தில் போலீசுக்கு உளவு சொன்ன 2 வாலிபர்களை நக்சலைட்டுகள் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

நகரி:

விசாகப்பட்டினம் மாவட்டம் பெத்தபயலு ஜிமாடுவிபா காட்டு பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. இங்குள்ள மத்திகுரு என்ற ஆதிவாசி கிராமத்தையும் நக்சலைட்டுகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் இக்கிராமததை சேர்ந்த சிலர் போலீஸ் உளவாளியாக இருப்பதாக நக்சலைட்டுகள் சந்தேகித்து வந்தனர். நக்சலைட்டுகள் நடமாட்டம், கூட்டம் நடத்தும் இடங்கள், ஆயுதங்கள் பதுக்கல் ஆகியவை பற்றி போலீசுக்கு தகவல் சென்றதால் அவர்களது சந்தேகம் வலுத்தது.

இதனால் கிராமத்தினரை நக்சலைட்டுகள் எச்சரித்து வந்தனர். ஆனாலும் தொடர்ந்து போலீசுக்கு ரகசிய தகவல் சென்றதால் நக்சலைட்டுகள் ஆத்திரம் அடைந்தனர்.

சூரிய சந்திரபாபு, கிஷோர்குமார் ஆகிய 2 வாலிபர்கள்தான் போலீஸ் உளவாளியாக இருப்பதாக கருதினர். நேற்று இரவு கிராமத்துக்குள் புகுந்த நக்சலைட்டுகள், வீட்டில் தூங்கி கொண்டிருந்த சூரியசந் திரபாபு, கிஷோர்குமாரை வலுக்கட்டாயமாக இழுத்து அங்குள்ள மைதானத்துக்கு கொண்டு சென்றனர். கிராமத்தினர் முன்னிலையில் 2 பேரையும் சுட்டுக் கொன்றனர். தங்களை பற்றி போலீசுக்கு உளவு சொன்னால் கொலை செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துவிட்டு தப்பி சென்றனர்.

அப்போது ஒரு கடிதத்தையும் வீசி சென்றனர். அதில் கிராமத்தினருக்கும் போலீசுக்கும் எச்சரிக்கை விடுத்து எழுதி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com