

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது. அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார்.
இந்த பதவி ஏற்பு விழாவுக்காக இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இம்ரான்கானின் அழைப்பை சித்து ஏற்று, இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு நல்லெண்ண தூதராக நான் பாகிஸ்தான் செல்ல உள்ளேன். எனது பயணத்தின் மூலம் இரு நாடுகளிடையே உள்ள உறவு மேம்படும் என நான் நம்புகிறேன் என அவர் வாஹா - அட்டாரி எல்லையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.