தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிவசேனாவில் இணைந்தார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சச்சின் ஆகிர் இன்று சிவசேனாவில் இணைந்தார்.
சச்சின் ஆகிர்- உத்தவ் தாக்கரே
சச்சின் ஆகிர்- உத்தவ் தாக்கரே
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மாபெரும் வெற்றிப் பெற்றது. மொத்தமுள்ள 48 இடங்களில் 41 இடங்களை கைப்பற்றியது.

அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே பல்வேறு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மும்பை நகர தலைவருமான சச்சின் ஆகிர் இன்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.

இது குறித்து சச்சின் கூறுகையில், ‘அரசியலில் சில சமயங்களில் கடினமான முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது’ என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com