வீட்டு வாசலிலேயே தந்தை - மகன் வெட்டிக் கொலை.. டெல்லியை உலுக்கிய சம்பவம்

கரண் தனது குடியிருப்புக்கு வெளியே நின்று ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
வீட்டு வாசலிலேயே தந்தை - மகன் வெட்டிக் கொலை.. டெல்லியை உலுக்கிய சம்பவம்
Published on

தேசிய தலைநகர் டெல்லியில் ஊழல் சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவர் தனது மகன் கரணுடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்தார்.

நேற்று கரண் தனது குடியிருப்புக்கு வெளியே நின்று ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து கரணை சரமாரியாக வெட்டினார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த ராகேஷ், தனது மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் அந்த நபர் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

தகவலறிந்து விரைந்த போலீசார் , ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தை, மகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சொத்து விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் இந்த இரட்டைக் கொலை நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com