விமானப்படை அதிகாரியின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கட்டாய மதமாற்றம் - நாக்பூரில் அதிர்ச்சி

ஹஸ்ரத் மௌலானா என்ற மதப் பெரியவர் முன்னிலையில், அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக மதமாற்றச் சடங்குகளைச் செய்துள்ளனர்.
விமானப்படை அதிகாரியின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கட்டாய மதமாற்றம் - நாக்பூரில் அதிர்ச்சி
Published on

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பணம் பறிக்கப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 வயதான பாதிக்கப்பட்ட பெண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் வேறு நகரத்தில் விமானப்படை அதிகாரியாக பணியிலுள்ளார்.

நடந்ததை தாமதமாக அறிந்து பெண்ணின் கணவர் கடந்த ஜூன் 14 அன்று புகார் அளித்ததை அடுத்து அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நடந்தது என்ன?

போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி,

கடந்த 2025 பிப்ரவரி மாதம் நிலம் வாங்க விருப்பம் தெரிவித்து அவரது பள்ளி நண்பன் அய்யாஸ் தாஜ் மதாரே என்பவர் பெண்ணை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.

பிப்ரவரி 8 அன்று ஒரு ஓட்டலில் நடந்த சந்திப்பின் போது, அய்யாஸ் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துள்ளார்.

பெண் மயங்கியதும் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

அந்த காட்சிகளை அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி கடந்த சில மாதங்களில் அந்தப் பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் வரை பறித்துள்ளார்.

இதில் தனது நண்பர்ளையும் அய்யாஸ் கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டார். அவருக்கு செய்வினை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

கடந்த மே 31 அன்று, அய்யாஸ் மற்றும் அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கல்மேஷ்வர் பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளனர்.

அங்கு ஹஸ்ரத் மௌலானா என்ற மதப் பெரியவர் முன்னிலையில், அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக மதமாற்றச் சடங்குகளைச் செய்துள்ளனர்.

பின்னர், மிரட்டி அய்யாஸுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது

முதன்மைக் குற்றவாளி அய்யாஸ் தாஜ் மதாரே மற்றும் அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோதமாக இந்த திருமணம் நடத்தி வைத்த மௌலானாவைதேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

பெண் கட்டபயப்படுத்தப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் நாக்பூரில் கொந்தளிப்பான சூழலும் நிலவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com