ரூ.10 கோடி வேணும்.. எப்ஸ்டீன் உடன் தொடர்புபடுத்தி அவதூறு - மத்திய அமைச்சர் மகள் மானநஷ்ட வழக்கு | Epstein files

ரூ.10 கோடி வேணும்.. எப்ஸ்டீன் உடன் தொடர்புபடுத்தி அவதூறு - மத்திய அமைச்சர் மகள் மானநஷ்ட வழக்கு | Epstein files
Published on
Summary

எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி, அனில் அம்பானி, ஹர்தீப் சிங் புரியின் பெயர் இடம்பெற்றிருந்தது

அண்மையில் வெளியான அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடைய கோப்புகளில் பிரதமர் மோடி, அனில் அம்பானி, ஹர்தீப் சிங் புரியின் பெயர் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஜெப்ரி எப்ஸ்டீன் அல்லது அவரது குற்றச் செயல்களுடன் ஹர்தீப் சிங் புரி மகள் ஹிமாயனி புரிக்கு நிதி ரீதியான அல்லது தனிப்பட்ட தொடர்பு இருப்பதாக சில சமூக வலைதளப் பதிவுகள் சித்தரித்துள்ளன.

இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவை தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளை அகற்ற வேண்டும் என்றும் ஹிமாயனி புரி தனது மனுவில் கோரியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com