ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த நபர் உயிரிழப்பு - நண்பரை கைது செய்து போலீசார் விசாரணை

நவம்பர் 10 ஆம் தேதி ராஜேந்தர் தனது வீட்டில் இருந்தபோது, அவரது நண்பரான ராம் பகத் பரோடியா அங்கு வந்துள்ளார்.
AI image
Published on: 
Summary

மத்தியப் பிரதேசத்தில் ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Summary

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் ராஜேந்தர் பரோடியா என்பவர் தனது மனைவியுடன் குடும்பமாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து நவம்பர் 10 ஆம் தேதி இரவு நேரத்தில் ராஜேந்தர் தனது வீட்டில் இருந்தபோது, அவரது நண்பரான ராம் பகத் பரோடியா அங்கு வந்துள்ளார்.

அப்போது இருவரும் பேசி கொண்டிருந்தபோது, ரசகுல்லா என கூறி நாட்டு வெடிகுண்டு ஒன்றை ராஜேந்தரிடம் அவரது நண்பர் ராம் பகத் கொடுத்துள்ளார்.

இதையடுத்து நாட்டு வெடிகுண்டை வாங்கி ராஜேந்தர் கடித்த போது, பயங்கரமான வெடி சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் ராஜேந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராம் பகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரசகுல்லா என கூறி நாட்டு வெடிகுண்டை கொடுத்து ராஜேந்தரை ஏன் அவரது நண்பர் கொலை செய்தார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜேந்தர் மனைவி

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த ராஜேந்தர் மனைவி சுஷிலா பாய் கூறுகையில், “அது விலங்குகளை கொல்வதற்காக பயன்படுத்தடும் குண்டு.

வெடிச்சத்தம் கேட்டதும், நாங்கள் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துக்கொண்டு, எனது கணவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம்” என கூறினார்.

X