"மம்தா பானர்ஜிக்காக யூசுப் பாதனை ராஜினாமா செய்ய சொன்ன கங்குலி?.." சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

பழைய நட்பின் அடிப்படையில், யூசுப் பதானிடம் பேசும் பொறுப்பை கங்குலியிடம் திரிணாமுல் காங்கிரஸ் ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டது.
"மம்தா பானர்ஜிக்காக யூசுப் பாதனை ராஜினாமா செய்ய சொன்ன கங்குலி?.." சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
Published on

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.

மேலும் இத்தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்குள்ளும் கிளர்ச்சி வெடித்துள்ளது.

இதனால், மம்தா எம்.பி. ஆகி தேசிய அரசியலில் நுழையத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.

இதற்காக, முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெஹராம்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை ராஜினாமா செய்ய வைத்து, அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சவுரவ் கங்குலியும், யூசுப் பதானும் இணைந்து விளையாடியுள்ளனர்.

அந்த பழைய நட்பின் அடிப்படையில், யூசுப் பதானிடம் பேசி எம்பி பதவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்கும் தூதுவர் பொறுப்பை கங்குலியிடம் திரிணாமுல் காங்கிரஸ் ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டது.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சவுரவ் கங்குலி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

"இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான முட்டாள்தனமான குற்றச்சாட்டு. இத்தகைய செய்திகள் உண்மையை கேலி செய்வதாக உள்ளன.

ஊடகங்கள் இதுபோன்ற பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு, உண்மைகளை சரிபார்க்க வேண்டும். நான் யாருக்கும் தூது செல்லவில்லை." என்று அவர் தெரிவித்துள்ளார்.

கங்குலியைத் தொடர்ந்து எம்பி யூசுப் பதானும், "மம்தா பானர்ஜியோ அல்லது திரிணாமுல் காங்கிரசின் பிற தலைவர்களோ என்னிடம் எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கேட்கவில்லை.

ஊடகங்களிலும் பரவி வரும் இந்த செய்திகள் முற்றிலும் தவறு" என்று விளக்கம் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com