சர்வாதிகார ஆட்சியைக்கூட மண்டியிட வைக்க முடியும் என நிரூபித்துவிட்டீர்கள் - 'கரப்பான்பூச்சிகளுக்கு' பிரகாஷ் ராஜ் வாழ்த்து

இவருடன் பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மியும் மாணவர்களை உண்ணாவிரதத்தை கைவிட செய்தார்.
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்
Published on

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலான போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் வரவேற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிவு

அதில், எனது அன்பான 'கரப்பான்பூச்சிகளுக்கு' எனது வாழ்த்துகள்! அன்பிற்குரிய சோனம் வாங்சுக் சார் மற்றும் இளைஞர்களின் பக்கம் நின்ற ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்.

ஒரு சர்வாதிகார ஆட்சியைக்கூட உங்களால் மண்டியிட வைக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள் என பதவிவிட்டுள்ளார்.

ஜந்தர் மந்தரில் பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கெடுத்து குறிப்பிடத்தக்கது. 23 நாட்களாக உண்ணவிரிதம் இருந்த இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 3 மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய நேரில் சென்று சமாதானம் கூறியவர்களில் இவரும் ஒருவர். இவருடன் பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மியும் அம்மாணவர்களை உண்ணாவிரதத்தை கைவிட செய்தார்.

சிஜேபி நிலைப்பாடு

இதனிடையே மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தங்கள் பிரதான கோரிக்கையாக கொண்டு போராடிய நிலையில், தர்மேந்திர பிரதானின் விலகலை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் வர்ணித்துள்ளனர்.

அதேநேரம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சிஜேபி வலியுறுத்தியுள்ளது.

ராகுல் சொன்னது என்ன?

முன்னதாக தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் காந்தி, இன்னும் இரண்டு கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாக தெரிவித்தார்.

அதாவது, குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட லட்சோபலட்சம் இளைஞர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் போராட்டத்தில் வன்முறையை பிரயோகித்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com