

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஜ்மீரா பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக உஸ்மானிய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், நியூ பாபா நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அஜ்மீரா (30). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
வேலைக்கு சென்ற பிறகு மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ள தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக கேள்வி கேட்டு முஸ்தபா மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு முஸ்தபா மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அஜ்மிரா கணவரை எதிர்த்து பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்தபா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து குழந்தைகள் முன்னிலையில் மனைவியை கீழே தள்ளி கழுத்தை அறுத்தார்.
இதில் அஜ்மிராவின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். மனைவியை கொலை செய்த பிறகு முஸ்தபா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஜ்மீரா பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக உஸ்மானிய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் முஸ்தபா போட்டோவை அனைத்து போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீசைலம் சாலையில் சென்று கொண்டு இருந்த முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர்.