கேரளாவில் மத நிறுவனங்களில் பெண் வேடமிட்டு திருடிய வாலிபர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில் பெண் ஒருவரது உருவம் சி.சி.டி.வி. கேமராவில் சிக்கியது.
கேரளாவில் மத நிறுவனங்களில் பெண் வேடமிட்டு திருடிய வாலிபர் கைது
Published on: 
Summary

அடையாளத்தை மறைக்கவும், போலீசாரை திசை திருப்பவும், திருட்டுகளின் போது பெண் போல வேடமிடும் செயலை செய்துள்ளார் என தெரியவந்தது.

கேரளம் மாநிலம் வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மதம் சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி பணம் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பெண் ஒருவரது உருவம் சி.சி.டி.வி. கேமராவில் சிக்கியது.

கைது

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் புல்பள்ளி அருகே உள்ள பாடிச்சிராவைச் சேர்ந்த, ரோமியோ பேபி (வயது 29) என தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் தனது அடையாளத்தை மறைக்கவும், போலீசாரை திசை திருப்பவும், திருட்டுகளின் போது பெண் போல வேடமிடும் செயலை செய்துள்ளார் என தெரியவந்தது.

போலீஸ்

அவன் மீது வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் உள்ள புல்பள்ளி, கல்பெட்டா, மானந்தவாடி, கெனிச்சிரா, திருநெல்லி, இருட்டி மற்றும் நூல்புழா உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் உறுதியானது.

கைதான ரோமியோ பேபி மீது கேரள சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (காபா) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X