நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள் - பதக்கம் வென்றவர்களிடம் பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்தது.உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது என்றார் பிரதமர் மோடி.
நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள் - பதக்கம் வென்றவர்களிடம் பிரதமர் மோடி பெருமிதம்
Published on

புதுடெல்லி:

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்தியா முதல் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்பட்டதில் பெருமை அடைகிறேன்.

140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

உங்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகள் காரணமாக நாடு முழுவதும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது.

உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com