அந்த நாற்காலியில் அமர உங்களுக்கு தகுதியில்லை.. தலைமை நீதிபதியை தகாதவாறு பேசிய வழக்கறிஞர் வெளியேற்றம்

சூர்யகாந்த், ''மனுவை பரிசீலனை செய்யும் பணி நடப்பதால் சிறிது காத்திருங்கள்'' என்றார்.
தலைமை நீதிபதி
Published on: 
Summary

தலைமை நீதிபதி ஏ. சூர்யகாந்திற்கு அந்தப் பதவியில் அமர்வதற்கான தகுதியும் குணமும் இல்லை என்று குற்றம் சாட்டிய வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மனு ஒன்றை கடந்த கடந்த 2ஆம் தேதி தலைமை நீதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தார். ஆனால் 15 நாட்கள் கடந்தும் தனக்கு எந்தப் பதிலும் கிடைக்காததால் அந்த வழக்கறிஞர் அதிருப்தியில் இருந்தார்.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 16) தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பக்சி, மோகனா அமர்வு முன் ஒரு வழக்கறிஞர் ஆஜரானார்.

இதுவரை எந்த பதிலும் வரவில்லை; எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.

வழக்கறிஞர் ஆவேசம்

அதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''மனுவை பரிசீலனை செய்யும் பணி நடப்பதால் சிறிது காத்திருங்கள்'' என்றார்.

இதனை கேட்டு ஆவேசம் அடைந்த வழக்கறிஞர், ''நீங்கள் அந்த நாற்காலியில் அமரத் தகுதியற்றவர்; உங்களுக்கு அந்த நேர்மை இல்லை'' என, தலைமை நீதிபதி சூர்யகாந்த்தை நோக்கி கடுமையாக பேசினார்.

நீதிபதிகள் பாக்சி மற்றும் மோகனா மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும், தலைமை நீதிபதி சூர்யகாந்த் அந்தப் பதவியில் அமரத் தகுதியானவர் என்று தான் கருதவில்லை என்றும் அந்த வழக்கறிஞர் கூறினார்.

வழக்கறிஞர் வெளியேற்றம்

அதனைத் தொடர்ந்து, நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்த நீதிமன்ற அறையின் காணொளி மற்றும் ஒலி அமைப்புகளை அதிகாரிகள் அணைத்தனர்.

பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடன் அந்த வழக்கறிஞரும் அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

மற்ற வழக்கறிஞர்கள், அந்த வழக்கறிஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

தொடர் அவமதிப்பு

முன்னதாக கடந்த ஜூலை மாதம், வழக்கறிஞரின் உதவியின்றி நேரில் வழக்கை வாதிட வந்த ஒரு தரப்பினர், தலைமை நீதிபதி சூர்யகாந்த்தை தகாத வார்த்தைகளால் திட்டி அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025 அக்டோபரில் ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் தலித் சமூகத்தை சேர்ந்த அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பை வீச முயன்றதும் குறிப்பிடத்தக்கது.

X