

இந்திய தலைமை ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யும் வகையில் மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சி மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாதிரி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாங்கள் உங்களை தப்பிக்க விடப்போவதில்லை. இதை நான் அன்போடும் பாசத்தோடும் சொல்கிறேன். நாங்கள் மோசமானவர்களோ தீயவர்களோ அல்ல, ஆனால் நாங்கள் அரசியலமைப்பையும் மக்களின் குரலையும் பாதுகாப்போம்.
நீங்கள் இந்த விளையாட்டை தேர்தல்களை தில்லுமுல்லு செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளீர்கள். மோடியும், அமித் ஷாவும் ஒருவேளை உச்சத்தில் இருக்கலாம். அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், நீங்கள் அவர்களின் கருவியாகச் செயல்படுகிறீர்கள்.
SIR நடவடிக்கை ஒரு அரசியல் ஆயுதமாக கொண்டு ஞானேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மற்றவர்கள் இந்திய ஜனநாயகத்திற்கு சேதம் விளைவித்தனர்.
முழு எதிர்க்கட்சியினரும் (சுமார் 250 எம்.பி.க்கள்) இங்கே அமர்ந்து, ஞானேஷ் குமார் மீதான பதவி நீக்க நடவடிக்கை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒன்று, இந்த வாக்காளர்கள் முறையானவர்கள் என்றும், 2024 மக்களவை தேர்தல்கள் முறையானவை என்றும் சொல்லுங்கள். அல்லது, இவர்கள் முறையற்ற வாக்காளர்கள் என்று சொல்லுங்கள். அப்படியானால், 2024 மக்களவைத் தேர்தலும் முறையற்றதாகிவிடும்.
நீங்கள் தொடர்ந்து தேர்தல்களில் முறைகேடு செய்யலாம். சிபிஐ (CBI) மற்றும் அமலாக்க துறையை (ED) தொடர்ந்து தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கலாம். ஆனால், இது தற்காலிகமானது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.