

மனிதர்களிடையே கருணை, நற்செயல்கள் மற்றும் சமூக பிணைப்பை முன்னிலைப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13 அன்று உலக கருணை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 1997 இல் பல்வேறு சர்வதேச கருணை குழுக்கள் முதன்முதலில் ஒன்றுகூடி மாநாடு ஒன்றை நடத்தினர்.
இதையடுத்து அரசு சாரா அமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பான உலக கருணை தினம், 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கருணை தினமானது, கருணைமிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்பவும், ஒருவரை மனதளவில் பாராட்டவும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு உதவவும், சமூக நல தொண்டுகளில் ஈடுபடவும் வலியுறுத்துகிறது.
நம்மிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதை காட்டிலும், விலை மதிப்பற்ற அன்பு, இரக்கம் மற்றும் கருணையை மற்றவர்களிடம் காட்டும்படி உலக கருணை தினம் வலியுறுத்துகிறது.
நாம் ஒவ்வொருவரும் செய்யும் கருணை செயல்கள், மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து,
சமூகப் பின்னணி, மொழி, இனம் மற்றும் வேறுபாடுகளை பார்க்காமல், அனைவரையும் சமமாக மதித்து நடத்துவது சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும்.
பிறருக்கு உதவி செய்வதும் கருணை காட்டுவதும் நமது மன அழுத்தத்தைக் குறைத்து, மனநலத்தையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மற்றவர்களிடம் கருணை காட்டுவதற்கு பெரிய உதவிகள் அல்லது பணம் தேவையில்லை.
ஒரு சிறிய புன்னகை, ஆறுதலான வார்த்தை மற்றும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு செவிசாய்ப்பது கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
மனிதர்களிடம் ஆக்சிடோசின் மற்றும் செரோடோனின் போன்ற நேர்மறையான வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் உலக கருணை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.