மனைவியை கொன்று உடலை வீசிய கணவன்: பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களால் வெளிவந்த உண்மை

மனைவியை கொலை செய்து உடலை காலியான இடத்தில் வீசிய நிலையில், போலீசார் கணவனை கைது செய்தனர்.
கொலை வழக்கு
கொலை வழக்கு
Published on: 

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகர் சந்திரா ராவத் (வயது 32). இவருடைய மனைவி அனசுயா (வயது 28). இருவரும் பெங்களூருவில் உள்ள சம்பிகோஹல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் வசித்து வந்துள்ளனர். ராவத் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். அனசுயா ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

மனைவி உடலுடன் 3 நாட்கள் இருந்த கணவன்

நிதிச்சுமை தொடர்பாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 11-ந்தேதி இந்த தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ராவத் மனைவியை அடித்து உதைத்ததுடன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மனைவி இறந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். மனைவி உடலும் மூன்று நாட்கள் இருந்துள்ளார். பின்னர் ஒரு துணியில் மனைவி உடலை கட்டி, பெட்டால் சுருட்டி காலியான ஒரு இடத்தில் வீசியுள்ளார்.

அதன்பின் ஏதும் தெரியாததுபோன்று இருந்துள்ளார். மேலும், உடலை வீசிய பக்கம் சென்று அடிக்கடி பார்த்துள்ளார். பெங்களூருவில் காலியான இடங்களை மாநகராட்சி ஊழியர்கள் அடிக்கடி சுத்தம் செய்வார்கள். அப்படி அழுகிய நிலையில் உடல் ஒன்றை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காண்பதில் சிக்கல்

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இரண்டு வாரத்திற்கு மேல் ஆனதால், உடலை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், அவர் அணிந்திருந்த ஆடையில் ஒரு துணிக்கடையின் டேக் இருந்தது. அதை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது இறந்துபோனவர் அனசுயா என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்று அவருடைய கணவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இருவருக்கும் இடையில் தகராறு இருந்ததை சக ஊழியர்கள் தெரிவிக்க, பின்னர் போலீஸ் விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ராவத் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராவத், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com