பாதுகாப்பு படை வீரர்களிடம் Gen Z எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் - வைரலாகும் சர்ச்சை வீடியோ

பாதுகாப்பு அதிகாரிகளிடம் மரியாதையில்லாமல் பேசிய சுற்றுலா பெண்ணின் வீடியோ விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
Ladakh Gen Z Controversy
Published on

லடாக் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படை வீரர்களிடம், சுற்றுலா சென்ற பெண்கள் ‘நாங்கள் ஜென் சி தலைமைறையினர்’ என்று கூறி மரியாதையில்லாமல் பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் சோதனைச் சாவடி

லடாக் பகுதியில் உள்ள மினிமார்க் சோதனைச் சாவடியில், சுற்றுலா சென்ற பயணிகளின் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களின் வாகனம் பல மணி நேரமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக, அங்கு இருந்த இரண்டு பெண்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சர்ச்சை பேச்சு

அந்த சமயத்தில் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரியிடம், ‘நாங்கள் ஜென் சி தலைமுறையினர், இந்த முட்டாள்தனத்தை நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்று கூறினார்.

மேலும், பாதுகாப்பு படை வீரர்களின் கட்டுப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கியதோடு, மற்ற சுற்றுலா பயணிகளையும் அங்கிருந்து வெளியேறுமாறு அந்த பெண் கூறினார்.

மேலும் அந்த பெண், நமது வரிப் பணத்தால் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது. அவர் இப்போது நமக்கு மேல் போய் விடுவாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வைரலானது. இந்த பதிவிற்கு சமூக வலைதள பயனர்கள், அந்த பெண்ணின் நடத்தை மோசமானது மற்றும் மிகவும் அருவருப்பானது என்று கூறினர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, தான் சொன்ன வார்த்தைகளுக்காக தன்னை மன்னித்து கொள்ளும்படி, அந்த பெண் பதிவிட்டுள்ளார்.

மன்னிப்பு

அவர் அந்த வீடியோவில், “எங்களுடைய தேசத்தின் பாதுகாவலனாக உள்ள சகோதரரே, தயவு செய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டார்.

நாங்கள் விரக்தியின் காரணமாகவே அப்படி பேசுகிறோம். ஆனால் நாங்கள் வைத்த விமர்சனத்திற்கு நீங்கள் ஒருபோதும் பதிலுக்கு எதுவும் சொல்வதில்லை. என்னை உங்களின் ஒரு சிறு தங்கையாக கருதி மன்னித்து கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

கண்டனம்

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, அந்த பெண் கூறிய இந்த கருத்திற்கு தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், ஜென் Z என்ற அடையாளத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, பழைய என் அப்பா யார் என்று தெரியாது என்ற மனப்பான்மையை போல் ஆகிவிட்டது என்று கூறினார்.

பாதுகாப்பு படை வீரர்கள் மீதான விமர்சனத்திற்கு முன்னாள் ராணுவ அதிகாரி கே.ஜே.எஸ். தில்லனும், அந்த சுற்றுலா பயணியின் நடத்தையை விமர்சித்தார்.

லெப்டினண்ட் ஜெனரல் டி.பி. பாண்டே கூறுகையில், இந்த சம்பவம் ஜென் Z தலைமுறையினரை மிகவும் எதிர்மறையாக சித்தரித்துள்ளது என்று கூறினார்.

இதற்கிடையில் லெப்டினண்ட் ஜெனெரல் சதீஷ் துவா, ராணுவ சம்பளங்கள் குறித்ததாக கூறப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தடோடு, லடாக் பிராந்தியத்தின் பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com